இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞனொருவர் வித்தியாசமானதும் ஆபத்து விளைவிக்கக்கூடியதுமான 300 செல்லப் பிராணிகளுடன் ஒரே அறையில் வாழ்ந்து
வருகிறார்.
லியம் அன்ரூ என்ற 16 வயதான பாடசாலை செல்லும் மாணவன் ஒருவரே இந்த விநோதமான செல்லப் பிராணி வளர்ப்பை மேற்கொள்கிறார்.
இம்மாணவனின் அறையில் 12 சிலந்திகள், 5 தேள் மற்றும் 8 பாம்பு என ஆபத்தான உயிரினங்கள் உட்பட பல்வேறு வகையான பல்லி, தவளை மற்றும் பறவைகளையும் வளர்க்கிறார் அன்ரூ.
சில வேளைகளில் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது பாம்புகளை தனது தோளில் போட்டுக்கொண்டு செல்வாராம் அன்ரூ.
இது குறித்து அன்ரூ கூறுகையில், எனது அறையில் 60 வகையான ஊர்வன உள்ளிட்ட 300 உயிரினங்களும் வாழுகின்றது. ஆனால் அவை ஒரு போதும் எனது படுக்கையறையிலிருந்து வெளியேறியதில்லை. மனிதர்களை விட அதிகமாக இந்த உயிரினங்களுக்கே நான் முன்னுரிமை அளிக்கிறேன்.
சாதாரணமாக நான் வளர்க்கும் உயிரினங்களைப் பெண்களுக்கு பிடிக்காது. எனவே எனது வீட்டிற்கு பெண்களை அழைத்து வருவது குறைவு எனத் தெரிவித்துள்ளார்.
அன்ரூவின் விநோதமான செல்லப் பிராணிகள் வளர்ப்பிற்கு அவரது தாய் பெரிதும் உதவியாக உள்ளாராம்.
0 கருத்து:
கருத்துரையிடுக