புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் சர்க்கசிலிருந்து தப்பிய புலி ஒன்று கழிப்பறையில் பதுங்கியிருந்ததால் அங்கிருந்த பெண் அதனைப் பார்த்து
அலறியுள்ளார்.அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில், ஷ்ரைன் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கசில் புலியின் சாகசத்தை காண்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஜென்னா க்ரெப்பியல் என்ற பெண் தன் மூன்று வயது மகளுடன் சென்றிருந்தார்.
அப்பொழுது சர்க்கசில் புலியின் சாகச நிகழ்ச்சி முடிந்து இடைவேளை விடப்பட்டதால் ஜென்னாவும், அவரது மகளும் கழிப்பறைக்கு சென்றுள்ளனர்.

கழிப்பறையில், முகத்தை கழுவிக்கொண்டு திரும்பிய ஜென்னா 1 மீட்டர் தூரத்தில் புலி ஒன்று நின்று கொண்டிருந்ததை பார்த்து அலறியுள்ளார். ஆனால், அவரது மகள் பீதியடையாமல் புலியை பார்த்து கொண்டிருந்தாள்.
ஜென்னா அதிர்ச்சியில் நின்றிருந்த போது, சர்க்கஸ் ஊழியர்கள் புலியை தேடிக்கொண்டு வந்தனர். பின்னர் கழிப்பறைக்குள் இருந்த புலியை அழைத்து சென்று கூண்டில் அடைத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top