கொலிவுட்டில் விஜய் நடித்து வரும் தலைவா படத்தின் படப்பிடிப்பில் திடீரென்று அஜித் வருகை தந்ததால் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர் தலைவா படக்குழுவினர்.
சமீபகாலமாக தமிழ்ப்படங்களின் படப்பிடிப்புகள் தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா நாடுகளிலும் நடந்து வருகிறது.
பெருவாரியான படப்பிடிப்புகள் அமெரிக்கா, அவுஸ்திரேயா போன்ற அயல்நாடுகளில் நடந்தாலும், சில படப்பிடிப்புகள் மும்பையில் நடந்து வருகிறது.
அந்த வகையில் துப்பாக்கி படத்தையடுத்து விஜய் நடித்து வரும் தலைவா படப்பிடிப்பும் மும்பையில் தான் அதிக நாட்கள் நடந்தது. அந்த சமயத்தில் அஜித்தின் வலை படப்பிடிப்பும் அதே மும்பையில் நடந்து வந்தது.
இந்த நிலையில் தனது படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியிலிருந்து சிறிது தூரத்தில் விஜய் நடிக்கும் தலைவா படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்ட அஜித், திடீரென்று வருகை தந்திருந்தார்
அஜித்தின் வருகையைப் பார்த்து விஜய் உட்பட அனைவருமே இன்ப அதிர்ச்சியடைந்தார்களாம்.
அதைத் தொடர்ந்து, விஜய்யிடம் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்த அஜித் தலைவா படத்தில் விஜய் பாடிய ஒரு பாடலையும் கேட்டாராம்.
கேட்டு முடித்ததும் இப்பாடல் இந்த ஆண்டின் சூப்பர் வெற்றிப் பாடல் வரிசையில் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என்று கூறி, விஜய்யை சந்தோசப்படுத்தி விட்டு அங்கிருந்து விடைபெற்றுள்ளாராம் அஜித்.
0 கருத்து:
கருத்துரையிடுக