புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு சந்திவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து திருடப்பட்ட தங்கச் சங்கிலி, உருக்கிய தங்கக் கட்டியாக மீட்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சந்திவெளியிலுள்ள வீடொன்றிலுந்து ஒன்றை இலட்சம் ரூபாய் பெறுமதியான
நகைகளும், ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பணமும் திருடப்பட்டிருந்தன.

திருடப்பட்ட பணத்தில் 43,730 ரூபாவையும், ஒன்றரை பவுண் உருக்கப்பட்ட கட்டித் தங்கத்தையும் தாம் மீட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸ் சார்ஜன்ட் கே.எம்.றபீக் தெரிவித்தார்.

திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களில் நால்வரை புத்தளம் மற்றும் கொழும்பு பகுதிகளில் வைத்துக் கைது செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

திருடப்பட்ட நகை கொழும்பிலுள்ள நகைக் கடையொன்றில் விற்கப்பட்டு உருக்கிய நிலையில் இருந்தபோதே தாம் அதனை மீட்டதாக அவர் மேலும் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top