புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


கரந்தெனிய, கொடவெல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று (27) பகல் தாய், மகள் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவர்களது வீட்டிலிருந்து துர் நாற்றம் வெளியேறியதைத் தொடர்ந்து நபர் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதன்படி வீட்டிற்குச் சென்ற பொலிஸார் மூன்று சடலங்களை மீட்டுள்ளனர்.

39 வயதான தாய் மற்றும் 9, 7 வயதான பிள்ளைகள் ஆகியோரது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top