புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காதல் தோல்வியால் பெண் சாப்ட்வேர் என்ஜினியர் தனது காதலன் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புவனேந்திரன் நாயரின் மகள் ஜீவா (23). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர்
என்ஜினியராக இருந்தார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல் (24) சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்க்கிறார். ராகுல் பள்ளிக்கரணையை அடுத்துள்ள ஜல்லடியன்பேட்டையில் வீடு எடுத்துத் தங்கியுள்ளார். அவரும், ஜீவா நாயரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ராகுல், ஜீவாவுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். இதையடுத்து ஜீவா நேற்று பெங்களூரில் இருந்து சென்னை வந்து ராகுலை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று ராகுல் ஜீவாவிடம் தெரிவித்துள்ளார். நான் குளிக்க வேண்டும் உன் வீட்டுக்கு அழைத்துச் செல் என்று ஜீவா ராகுலிடம் தெரிவித்துள்ளார். ராகுலும் அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். குளியல் அறைக்குள் சென்ற ஜீவா தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ராகுல் கதவை உடைத்து வந்து பார்த்தபோது ஜீவா உடல் கருகி பிணமாகக் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜீவாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோலை ஜீவாவே கொண்டு வந்தாரா அல்லது அவர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டதா என்ற விசாரணை நடக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top