நமக்கு வாழைப் பழம் கிடைத்தால் என்ன செய்வோம்... "இதென்ன கேள்வி... பழத்தை சாப்பிட்டு, தோலை, குப்பையில் தூக்கி வீசுவோம்...' என்று தானே கூறுகிறீர்கள். ஆனால், ஜப்பானைச் சேர்ந்த, 23 வயது இளைஞர் ஒருவர்,
வாழைப்பழங்களில் விதவிதமான சிற்பங்களை உருவாக்கி, அசத்துகிறார். அவரின் பெயர், கெசுகி யமெடி. "வழக்கமான சிற்பங்களை
உருவாக்குவதற்கு பதிலாக, வித்தியாசமான சிற்பங்களை உருவாக்கலாமே...' என்ற எண்ணம் இவருக்கு தோன்றியது; உடனடியாக களத்தில் இறங்கி விட்டார்.
வாழைப்பழங்களில் விதவிதமான சிற்பங்களை உருவாக்கி, அசத்துகிறார். அவரின் பெயர், கெசுகி யமெடி. "வழக்கமான சிற்பங்களை
உருவாக்குவதற்கு பதிலாக, வித்தியாசமான சிற்பங்களை உருவாக்கலாமே...' என்ற எண்ணம் இவருக்கு தோன்றியது; உடனடியாக களத்தில் இறங்கி விட்டார்.
வித்தியாசமான சிற்பங்கள் என நினைத்ததுமே, அவரின் கண் முன் தோன்றியது, வாழைப்பழம் தான். வி.ஐ.பி.,க்களின் முகங்கள், பிரபலமான கார்ட்டூன் உருவங்கள் என, விதவிதமான சிற்பங்களை, வாழைப்பழத்தைக் கொண்டு உருவாக்கி, சாதனை படைத்துள்ளார். வாழைப் பழத்தை தவிர, பற்பசையை மட்டுமே, சிற்பங்கள் உருவாக்கு வதற்கு கூடுதலாக இவர் பயன் படுத்துகிறார். சாந்தை இணையம் இந்த ஒவ்வொரு சிற்பத்தையும் உருவாக்குவதற்கு, அதிகபட்சமாக அரை மணி நேரம் தான் எடுத்துக் கொள்கிறார்.
"அதெல்லாம் சரி... வாழைப்பழங்கள் விரைவில் கெட்டுப் போய் விடுமே, பின் எப்படி இந்த சிற்பங்களை பாதுகாக்கிறீர்கள்...' எனக் கேட்டால், வித்தியாசமான பதில் அவரிடம் இருந்து வருகிறது. "வாழைப்பழ சிற்பங் களை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் என்று யார் கூறியது? சிற்பங்களை உருவாக்கிய பின், அதனுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வேன். பின், அந்த வாழைப்பழம் கெட்டுப் போவதற்கு முன், சாப்பிட்டு விடுவேன்...' என, நாக்கைச் சப்புக்கொட்டியபடி, கிண்டலாக பதில் அளிக்கிறார், அந்த ஜப்பான் இளைஞர் .
0 கருத்து:
கருத்துரையிடுக