புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொலிவுட்டில் நயன்தாரா, நாகார்ஜுனா ஜோடியாக நடித்து வரும் லவ் ஸ்டோரி படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனியில் நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் மன்சூர்அலிகான் பங்கேற்று பாடல் குறுந்தகட்டை வெளியிட்டார். விழா மேடையில் நயன்தாராவின் உருவப்பட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

அதில் நயன்தாராவின் கையில் பிரபு என்ற பெயரில் பச்சை குத்தி இருந்தது தெரிந்தது.

அதைப் பார்த்த மன்சூர்அலிகான் கூறுகையில், பிரபுதேவா பெயரை பிரபு என்று நயன்தாரா கையில் பச்சை குத்தி உள்ளார். இந்த விழாவுக்கு பிரபுதேவா வருவார் என்று எதிர்பார்த்தேன்.

அவர் இந்தியில் பெரிய இயக்குனர் ஆகிவிட்டார். ரூ.15 கோடி, 20 கோடி என சம்பளம் வாங்குவதாகவும் சொல்கிறார்கள்.

அவர் பெயரை நயன்தாரா கையில் பச்சை குத்திய நேரம் நல்ல நேரமாக அமைந்து இருக்கிறது. அதனால் தான் பெரிய இயக்குனராகி இருக்கிறார்.

எனக்கும் நடிகைகள் என் பெயரை கையில் பச்சை குத்த வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் குத்தமாட்டார்கள்.

நயன்தாரா மனதில் பிரபுதேவா ஆழமாக பதிந்து இருப்பதால் தான் பெயரை கையில் குத்தி உள்ளார்.

பொதுவாக காதல் படங்கள் எல்லாமே வெற்றிகரமாக ஓடியுள்ளதால், தற்போது காதல் படமாக தயாராகி உள்ள லவ் ஸ்டோரி படமும் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார்.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top