ஐபிஎல் 6வது தொடரில் சென்னையில் தற்போது நடைபெற்று வரும் 38வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்
முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களைக் குவித்திருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்ல 201 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் காம்பீர், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முரளி விஜய்க்குப் பதில் ஷாகா கடந்த பல போட்டிகளில் பெருமளவு சோபிக்காமல் போன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான முரளி விஜய் இன்றைய போட்டியில் நீக்கப்பட்டு வருக்குப் பதில் விர்திமான் ஷாகா சேர்க்கப்பட்டார். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக விர்திமான் ஷாகாவும் நல்ல பார்மில் இருக்கக் கூடிய மைக் ஹசியும் களம் இற்ங்கினர். கொல்கத்தாவின் யூசுப் ஃப்தான் முதல் ஓவரை வீசினார். சென்னை நிலையான தொடக்கம் முதல் ஓவரில் பதானின் முதல் பந்தில் ஷாகா ரன் எடுக்கவில்லை. ஆனால் அதற்கடுத்த பந்தில் ஷாகா ஒரு ரன் அடிக்க பின்னர் மைக் ஹசி பதானின் பந்துகளை எதிர்கொண்டார். இந்த ஓவரின் முடிவில் 6 ரன்கள் எடுக்கப்பட்டது. 2வது ஓவரை ஷமி அகமத் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்துகளை எதிர்கொண்ட ஹசி எந்த ஒரு ரன்னையும் எடுக்க முடியவில்லை. ஆனால் 4வது பந்தை அழகாக பவுண்டரிக்குத் தள்ளிவிட்டார் ஹசி. இன்றைய போட்டியின் முதல் பவுண்டரி இது. 2வது ஓவரின் முடிவில் 11 ரன்களை எடுத்தது சென்னை அணி. ஹசி 10 பந்துகளில் 10 ரன்களையும் ஷாகா 2 பந்தில் 1 ரன்னையும் எடுத்திருந்தனர். 3வது ஓவரை லக்ஷ்மிபதி பாலாஜி வீசினார். இவரது ஓவரின் 3,4 வது பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிகளுக்கு அனுப்பி வைத்தார் ஹசி. 5வது பந்தில் ரன் அடிக்காவிட்டாலும் கடைசி பந்தை மீண்டும் பவுண்டரிக்குத் தட்டி விட்டு சென்னை ரசிகர்களை துள்ள வைத்தார் ஹசி. 3வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன்களை எட்டியது. 16 பந்துகளில் ஹசி 24 ரன்களை எட்டியிருந்தார். ஹசி- ஷாகாவின் அபாரம் 4வது ஓவரை மீண்டும் ஷமி அகமது வீசினார். ஷமி அகமதின் 2,3வது பந்துகளை அடுத்தடுத்து ஷாகா பவுண்டரிகளுக்குத் தட்டிவிட்டார்.ஷமி அகமதின் கடைசி பந்தையும் அழகாக தூக்கி அடித்தார் ஷாகா. அது மிகச்சரியாக பவுண்டரி லைனுக்கு வெளியே விழ இன்றைய போட்டியின் முதலாவது சிக்சரை பதிவு செய்தார். இந்த ஓவரில் மட்டும் 15 ரன்களை சென்னை அணி குவித்தது. 4வது ஓவரின் முடிவில் சென்னை அணி 40 ரன்களைக் குவித்து நல்ல தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. 5வது ஓவரை சுனில் நரின் வீசினார். இந்த ஓவரின் 2,3வது பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிக்கு அடித்து விரட்டினார் ஹசி. இந்த ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்களை எடுத்திருந்தது. 6வது ஓவரை காலிஸ் வீசியிருந்தார். அவரது முதலாவது பந்தை ஹசி பவுண்டரிக்கும் 3,வது பந்தை ஷாகா பவுண்டரிக்கும் அனுப்பி பதம் பார்த்தனர். 4வது பந்தை ஷாகா சூப்பர் சிக்சருக்குப் பறக்கவிட்டார். இந்தஓவரின் முடிவில் 67 ரன்களைக் குவித்திருந்தது சென்னை அணி. ஷாகா 11 பந்துகளில் 26 ரன்களையும் ஹசி 25 பந்துகளில் 40 ரன்களையும் எடுத்திருந்தனர். இருவரும் 36 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்களைக் குவித்திருந்தனர். 31 பந்தில் மைக் ஹசி அரைசதம் 7வது ஓவரை பாட்டியா வீசினார். இந்த ஓவரில் சென்னை வீரர்கள் அதிரடியாக ரன்களைக் குவிக்க முடியவில்லை. சிங்கிள் ரன்களைத்தான் சேர்க்க முடிந்தது. மொத்தம் 5 ரன்கள் கூடுதலாக எடுத்தனர். 8வது ஓவரை காலிஸ் வீசினார். பாட்டியா ஓவரில் அடிக்க முடியாத குறையை ஹசி இந்த ஓவரில் தீர்த்துக் கொண்டார். காலிஸின் 2வது பந்தை சிக்சருக்குப் பறக்கவிட்டார். ஷாகாவும் விட்டுவைக்கவில்லையே காலிஸின் பந்தை…அவரது 4வது பந்தை பவுண்டரிக்குத் தூக்கி அடித்தார். ஷாகா 16 பந்தில் 34 ரன்களை எட்டியிருந்தார். காலிஸின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஹசி சிங்கிள் ரன் அடித்து தமது அரை சதத்தை எட்டினார். 31 பந்துகளில் ஹசி 50 ரன்களை எட்டினார். நடப்பு ஐபிஎல் தொடரில் மைக் ஹசியின் 4வது அரை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 8வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 86 ரன்களைக் குவித்தது. 9வது ஓவரை மீண்டும் பாட்டியா வீசினார். முதல் 5 பந்துகளில் நிதானமாக ரன்களை எடுத்துக் கொண்டிருந்தனர் சென்னை வீரர்கள். பாட்டியாவின் கடைசி பந்தை பவுண்டரிக்கு ஹசி தட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது ஓவர் முடிவில் 96 ரன்களைத் தொட்டது. 10வது ஓவரை சுனில்நரின் வீசினார். இவரது 3வது பந்தில் சென்னை அணி 100 ரன்களைக் கடந்தது.. 10 வது ஓவரின் முடிவில் சென்னை அணி 103 ரன்களைக் குவித்தது. ஷாகா 39 ரன்னில் அவுட் 11வது ஓவரின் முதல் பந்தில் பாட்டியா வீசிய பந்தில் ஷாகா அவுட் ஆனார். அவர் 23 பந்தில் 39 ரன்களை எடுத்திருந்தார். இதில் 2 சிக்சர், 4 பவுண்டரிகள் அடங்கும். களத்தில் 63 ரன்களுடன் இருந்த ஹசியுடன் ரெய்னா இணைந்து கொண்டார். 11வது ஓவரின் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்தது.12வது ஓவரை லக்ஷ்மிபதி பாலாஜி வீசினார். கடந்த சில ஓவர்களில் பவுண்டரிக்கு பந்துகள் போகவில்லையே என்ற குறையை பாலாஜியின் 4வது பந்தில் நிர்வர்த்தி செய்தார் ஹசி. இந்த ஓவரின் இறுதியில் 114 ரன்களை எடுக்கப்பட்டது. ஹசி 46 பந்துகளில் 72 ன்களை எட்டியிருந்தார்.13வது ஓவரை பாட்டியா வீசினார். பாட்டியாவின் 3வது பந்தில் பவுண்டரி அடித்து 78 ரன்களைத் தொட்டார் ஹசி. இதே ஓவரின் கடைசி பந்தில் மேலும் ஒரு பவுண்டரி அடித்து 83 ரன்களை எட்டினார். 13வது ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 127ரன்களைக்குவித்தது சென்னை. 100வது சிக்சரை எட்டிய ரெய்னா 14வது ஓவரை நரின் வீசினார். அவரது முதல் பந்தை ரெய்னா சிக்சருக்கு அனுப்பி வைத்து தமது அதிரடி ஆட்டத்துக்கு சுழி போட்டார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 100வது சிக்சரை ரெய்னா எட்டினார். இதே ஓவரின் கடைசி பந்தில் ஒரு பவுண்டரியைத் தட்டினார் ரெய்னா. . 14வது ஓவரின் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது. சதம் வாய்ப்பு நழுவியது- 95 ரன்னில் ஹசி அவுட் 15வது ஓவரை யூசுப் ஃபதான் வீசினார். 15வது ஓவரின் கடைசி பந்தில் அற்புதமான சிக்சரை ஹசி தூக்கி அடிக்க சென்னை அணி 151 ரன்களை எட்டியது. 15வது ஓவரின் முடிவில் சென்னை அணி 1விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.16வது ஓவரின் 3வது பந்தில் ரெய்னா அழகான பவுண்டரி அடித்தார்.இந்த ஓவரின் 5வது பந்தில் 95 ரன்களை எடுத்திருந்த ஹசி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 95 ரன்களை எடுத்திருந்தார். இதனால் அவரது சதம் வாய்ப்பு நழுவியது. 59 பந்துகளில் 95 ரன்களை எடுத்திருந்தார் ஹசி. இதில் 11 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். களத்தில் இருந்த ரெய்னாவுடன் கேப்டன் டோணி இணைந்து கொண்டார். கடைசி 4 ஓவர்கள்… 17வது ஓவரை காலிஸ் வீசினார். அவரது முதல் பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் ரெய்னா. இந்த ஓவரின் முடிவில் சென்னை அணி 168 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் டோணி 3 பந்துகளை எதிர்கொண்டு ரன் கணக்கைத் தொடங்காமல் இருந்தார். ரெய்னாவோ 17 பந்துகளில் 32 பந்துகள் எடுத்திருந்தார். 18வது ஓவரை லக்ஷ்மிபதி பாலாஜி வீசினார். இவரது முதல் பந்தில் சிங்கிள் ரன் அடித்து டோணி தனது ரன் கணக்கைத் தொடங்கினார். அப்பாடா! என்று ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கடைசி பந்தில் ஒரு பவுண்டரியை அடித்தார் டோணி. 18வது ஓவரின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது. கடைசி 2 ஓவரானாலும் டோணி, ரெய்னா என அடித்து ஆடக் கூடிய வீரர்கள் மட்டுமின்றி விக்கெட்டுகளும் கைவசம் இருப்பதால் சென்னை அணி 200 ரன்களைக் கடக்க வாய்ப்பிருப்பதாகவே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 200 ரன்களை நோக்கி… 19வது ஓவரை காலிஸ் வீசினார். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அமையாமல் சிங்கிள் ரன்களே எடுத்துக் கொண்டிருந்தனர் சென்னை வீரர்கள்.இந்த ஆதங்கத்தைப் போக்கும் வகையில் 5வது பந்தை பவுண்டரிக்குத் தட்டிவிட்டார் ரெய்னா. 19வது ஓவரின் முடிவில் சென்னை அணி 188 ரன்களை எடுத்தது. இறுதி ஓவரை பாலாஜி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரெய்னா ரன் அவுட் ஆனார். அவர் 25 பநதில் 44 ரன்களை எடுத்திருந்தார். இதில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடங்கும். அவரது அரை சத வாய்ப்பு நழுவியது. டோணியுடன் ஜடேஜா இணைந்தார். கடைசி ஓவரில் 5வது பந்தில் 194 ரன்களை எடுத்திருந்தது சென்னை அணி. கடைசி பந்தை எதிர்கொண்ட டோணி அற்புதமான ஒரு சிக்சர் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்களை எட்டியது. சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. கேப்டன் டோணி 12 பந்துகளில் 18 ரன்களுடனும் ஜடேஜா 1 பந்தில் 1 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதனால் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற நிர்ணயிக்கப்பட்டது.

0 கருத்து:
கருத்துரையிடுக