இந்தியா-ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரில், பாடசாலை ஒன்றை நடத்தி வருபவர், ராஜேஷ் தன்காத். இவர், தன் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவியரை, கடந்த, 11ம் திகதி, பாலியல்
பலாத்காரம் செய்தார்.
மாணவியர், நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூறப் போவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களுக்கு விஷம் கொடுத்தார். விஷம் அருந்திய நிலையில், வீட்டிற்கு திரும்பிய மாணவியர், அங்கு மயங்கி விழுந்ததை அடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இருந்தும், சிகிச்சை பலனின்றி, இரு மாணவியரும் இறந்தனர். இறப்பதற்கு முன், மாணவியரில் ஒருத்தி, நடந்த விவரங்களை, தன் குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, மாணவியரின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, பொலிசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளியின் உரிமையாளரை கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக