அமெரிக்காவில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஷூ பாலிஷ் செய்யும் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செருப்பு கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு காலணிகள் விற்பனை மட்டுமல்லாது வாடிக்கையாளர்களின் ஷூக்களுக்கு பாலிஷ் செய்யும் சேவையும் செய்யப்படுகிறது.
இந்த கடையில் பாலிஷ் செய்யும் பணியாளர்களாக இளம் பெண்கள் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள் குட்டை பாவாடை மற்றும் ஆபாசமான ஆடைகளை மட்டுமே அணிய அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வகை ஆடைகளை அணிந்து கொண்டு அங்கு வரும் ஆண் வாடிக்கையாளர்களுக்கு ஷூ பாலிஷ் செய்து விடுவதால் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலை மோதுகிறது.
இது குறித்து கடை உரிமையாளர் கெவின் ஒயிட் கூறுகையில், கல்லூரியில் படிக்கும் பெண்கள் தங்களின் கைச்செலவுகளுக்காகவும், கை நிறைய சம்பாதிக்கும் ஆசையில் இளம் பெண்கள் இங்கு பணியில் சேர்கின்றனர். இங்கு பணியாற்றும் பெண்களுக்கு அவர்களின் அழகுக்கேற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.
கறுப்பு நிற ஆடைகள் மட்டுமே அணிந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களை நாங்கள் பணியில் சேர்த்துக் கொள்வது கிடையாது.
வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தவும், வியாபாரத்தை பெருக்கவுமே இவ்வகை புதிய உத்தி கையாளப்பட்டு உள்ளது. இதில் தவறு ஏதும் இருப்பதாக தோன்றவில்லை என கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக