நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை ரூ.50 லட்சம் மோசடி புகாரில் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆனந்த தொல்லை, லத்திகா படங்களில் நடித்த இவரை சந்தானத்துடன் நடித்த கண்ணா லட்டுதின்ன ஆசையா படம் உச்சத்திற்கு கொண்டு சென்றதால், பின்பு அதிகமான படவாய்ப்புகள் குவிந்தன.
அழகன் அழகி, ஒன்பதுல குரு உட்பட படங்களில் பெரும் தொகை கொடுத்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட வைத்தனர்.
பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்க பவர் ஸ்டார் சீனிவாசனை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை துவங்கினர்.
சிவா, சந்தானம் நடிக்கும் பாயா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். சும்மா நச்சுன்னு இருக்கு படத்திலும் நடிக்கிறார்.
பவர் ஸ்டார் சீனிவாசன் திகதி கொடுத்த படங்களுக்கு குறிப்பிட்ட திகதியில் நடித்து கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
ஏற்கெனவே படமாகி வந்த படங்களும் பாதியில் நிற்கிறது. நான்கு படங்கள் இவரால் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பவர் ஸ்டார் சீனிவாசன் ரிலீசாவது வரை காத்திருப்பதா? அல்லது அவரை நீக்கிவிட்டு வேறு கொமடியர்களை நடிக்க வைத்து படங்களை முடிப்பதா? என்ற யோசனையில் அவர்கள் இருக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக