ஐ.பி.எல். சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.ஐதராபாத் நகரில் நடக்கும் லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பேட்டிங் செய்யும்
என்று அறிவித்தது. அதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக தெண்டுல்கரும், ஸ்மித்தும் களம் இறங்கி நிதானமாக விளையாடினர்.
கரன் சர்மா வீசிய 5-வது ஓவரில் தெண்டுல்கர் 14 ரன் அடித்திருந்த போது போல்டானார். அடுத்து வந்த கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார் இருந்த போதிலும், மிஸ்ரா வீசிய ஓவரில் இஷாந்த் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 22 ரன்கள் எடுத்தார்.
அதன் பின் வந்த பொல்லார்ட், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார் அதிரடியாக விளையாடிய ஸ்மித் 38 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய ராய்டு அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் சேர்த்தது. ராய்டு 34 ரன்களுடனும், பொல்லார்ட் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
130 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அக்சாத் ரெட்டியும், ஷிகார் தவானும் விளையாடினார்கள். தொடக்கம் முதலே அந்த அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ரெட்டி 7 ரன்னில் ஜான்சன் வீசிய பந்தில் அவுட் ஆனார். பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த சங்கக்காரா, மும்பை அணி வீசிய பந்தை பதம்பார்த்தனர். சங்கக்காரா 21 ரன்னில் ஹர்பஜன் வீசிய பந்தில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த விஹாரி தவானுடன் ஜோடி சேர்ந்து, அணியை வெற்றி பெறச்செய்தார்.
இதனால் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக, ஷிகார் தவான் 73 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா (ஐதராபாத்), ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக