புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 44-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் தொடங்கியது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற
கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது.

தொடக்க வீரர்களாக கௌதம் கம்பீர் மற்றும் பிஸ்லா களமிறங்கினார்கள். ஆரம்பத்திலேயே கம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் இர்பான் பதானால் ரன் அவுட் ஆனார். பிஸ்லாவும் 4 ரன்னில் யாதவ் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

பின்னர்  வந்த யூசப் பதான் - கல்லிஸ் ஜோடி சேர்ந்து விளையாடியது. ஆனால், இந்த ஜோடியும் விரைவாக வெளியேறியது. அடுத்து களமிறங்கிய மோர்கனும் 10 ரன்னில் அவுட் ஆனார். கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், பாதியா - தாஸ் ஜோடி 34 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது.

இறுதியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ராஜட் பாதியா 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

137 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் டெல்லி டேர் டெவில்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஆடிய சேவாக் (17 ரன்), ஜெயவர்தனே (5 ரன்), சொற்ப ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில், டேவிட் வார்னர் மற்றும் உன்முக்த் சந்த் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். சந்த் 37 ரன்னில் பிரெட் லீ வீசிய பந்தில் பாலாஜியிடம் கேச் கொடுத்து அவுட் ஆனார். டேவிட் வார்னர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் (6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெற செய்தார்.

இதனால் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top