புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்.குடாநாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் யாழ். போதனா வைத்தியசாலையில் காதல் தோல்வியில் நஞ்சருந்திய நிலையில் மூன்று இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
யாழ்.போதனா வைத்தியசாலை இறப்புக்களைப் பதிவு செய்யும் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நஞ்சருந்திய நிலையில் ஒரு இளைஞரும் காதலியால் ஏமாற்றப்பட்ட நிலையில் இரு இளைஞர்களும் நஞ்சருந்தியுள்ளனர்.

தனது உழைப்பை எல்லாம் செலவு செய்து காதலித்த பெண் தற்போது வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்வதற்கு முன்வந்து தன்னைப் புறக்கணித்ததால் மற்றுமொரு நபர் நஞ்சருந்தியுள்ளார்.

தனது மனைவியின் முறைகேடான நடத்தை காரணமான குடும்பஸ்தர் ஒருவர் நஞ்சு விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.

கடன் தொல்லையால், பெற்றோருடனான முரண்பாடு போன்ற காரணங்களால் சிலரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இவர்கள் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top