இப்படத்தில் தனுஷ் முதன்முறையாக மீனவராக நடித்திருக்கிறார். இவருடன் பூ பட நாயகி பார்வதி ஜோடி சேர்ந்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 1 வருடத்தை கடந்து விட்டது.
ஏன்? 1 வருடம் ஆனது என்ற கேள்விக்கு டிரைலரை பாருங்கள், புரியும் என்கிறார் தனுஷ்.
இன்று மாலை மரியான் டிரைலர் வெளியாகும் என்று தனுஷ் கூறியிருந்தார்.
தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமீபத்தில் வெளியான மரியான் படத்தின் "நெஞ்சே எழு" பாடலுக்கான புதிய டீஸர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக