பெண்ணொருவருக்கு பணம் கொடுத்து அவருடன் பாலியல் ரீதியில் உறவு கொள்ள முயற்சித்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணால் தாக்கப்பட்டதுடன் அவரிடமிருந்த 20,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி
என்பனவற்றையும் பறி கொடுத்த சம்பவம் ஒன்று கம்பளை பொலிஸ் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக கம்பளை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
குறிப்பிட்ட (முறைப்பாட்டுக்காரர்) நபர் மீது கம்பளை நகரில் தனிமையில் நின்ற பெண் ஒருவர் காதல் வலை வீசியுள்ளார். அதில் மயங்கிய நபர் அவளிடம் நெருங்கிய போது அவள் தன்னுடன் ஒரு இரவு தங்கி இன்பம் அனுபவிக்க விரும்பினால் ஆயிரம் ரூபா தனக்கு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் கம்பளை போத்தலபிட்டிய என்ற இடத்திற்குச் சென்றுள்ளனர். பெண் அழைத்துச் சென்ற இடத்தில் வைத்து குறித்த பெண்ணுடன் இன்னொருவரும் சேர்ந்து அந்த நபரை கடுமையாகத் தாக்கி அவரிடமிருந்த பணம் கையடக்கத் தொலைபேசி என்பனவற்றைப் பறித்துக் கொண்டு அவரை விரட்டியடித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் குறிப்பிட்ட பெண் அவளது உதவியாளர் ஆகியோரைக் கைது செய்ததுடன் நபரிடமிருந்து கையடக்க தொலைபேசியையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கம்பளை நீதிமன்ற நீதிவான் வசந்தகுமார முன்னிலையில் ஆஜர் செய்தபோது நீதிவான் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாப் பிணையில் செல்ல அனுமதித்து விசாரணையை ஒத்திவைத்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக