இந்தியா-டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் குர்காவ்னில் வைத்து 2 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். அதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை கடந்த திங்கட்கிழமை அன்று ரியல் எஸ்டேட் டீலர்கள் 2 பேர் காரில் கடத்தினர். அந்த 2 பேரும் அப்பெண்ணுக்கு பழக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குர்காவ்னில் உள்ள வணிக வளாக வாசலில் இருந்து கடத்தப்பட்ட அப்பெண்ணை அவர்கள் மஹிபால்பூர்-பால்வால் ரோட்டில் ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு காரில் வைத்து அவர்கள் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அப்பெண் நடந்த சம்பவம் குறித்து குர்காவ்ன் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒரு குற்றவாளியை கைது செய்தனர்.
டெல்லியில் பிஸியோதெரபி மாணவி, 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவங்களால் ஏற்பட்ட அதிர்ச்சி மாறும் முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக