புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகர் அஜீத் இன்று தனது பிறந்த நாளை படப்பிடிப்பில் கொண்டாடினார். ஏற்கனவே அஜீத், பிறந்தநாளை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாட அஜீத் ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர். கட்
அவுட், போஸ்டர்களும் தயார் செய்தார்கள். அஜீத் இதற்கு தடை வித்தார்.

தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்றும் கட்-அவுட் பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். பிறந்த நாளுக்கு விரயம் செய்யும் பணத்தை பெற்றோருக்காக செலவிடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ஆடம்பர கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ரத்து செய்து விட்டனர். அஜீத் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பங்கேற்று நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்து வருகிறது. அங்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

அஜீத் பிறந்தநாளையொட்டி அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றார், படப்பிடிப்பில் மனைவி மகளுடன் அஜீத் பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு படக்குழுவினர் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அஜீத் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் சென்னை ரெட் ஹில்ஸ்சில் உள்ள பாரத மாதா ஆசிரம குழந்தைகள் 420 பேருக்கு இலவச உணவு வழங்கினார்கள். நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்களையும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் அஜீத் ரசிகர் மன்றத்தினர் சரவணன், சச்சின் மணி, முரளிதரன், வேலு, கிருஷ்ணன், ஆனந்த், தீனாசாரதி, பில்லா தனசேகர், வெங்கடேஷ், பத்மநாபன், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top