ஜப்பானிய சுமோ மல்யுத்தம் உலகப் பிரசித்தமானது. மாமிச மலைகளென வர்ணிக்கப்படும் பருமனான சுமோ வீரர்கள் தம்மையொத்த வீரர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபடுவர்.
ஆனால், சுமோ வீரர்கள் குழந்தைகளை அழ வைக்கும் போட்டியும் ஜப்பானில் வருடாந்தம் நடைபெறுகிறது.
‘குழந்தைகளை அழவைக்கும் சுமோ போட்டி’ என இது அழைக்கப்படுகிறது.
இரு சுமோ வீரர்கள் தலா ஒரு குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு போட்டியில் பங்குபற்றுவர். யாரின் கையிலுள்ள குழந்தை முதலில் அழுகிறதோ அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
0 கருத்து:
கருத்துரையிடுக