கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு சத்திர சிகிச்சை மூலம் சிறுநீரகம் ஒன்றை மாற்றுவதற்கு தனது சிறுநீரத்தை தருவதாக கூறி அதற்காக ஒரு
இலட்சம் ரூபாய் பணத்தையும் பெற்று மருத்துவ பரிசோதனைகள் அனைத்துக்கும் சென்ற பெண் ஒருவர் பின் சிறுநீரகத்தை வழங்க மருத்ததை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலவத்துகொடை பிரதேசத்தை சேர்ந்த சிறுநீரக நோயாளி ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடநடியாக சிறு நீரக மாற்று சிகிற்சை ஒன்று செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை வழங்கி இருந்தனர். அதன் பிரகாரம் ஒரு பெண் முன் வந்து அவருக்கு சிறு நீரகத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். பின் அதற்கான முன் பணமாக ஒரு இலட்சம் ரூபாயை பெற்ற அவர் அனைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கும் சென்றுள்ளார்.
அனைத்தும் முடிவடைந்து சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடக்கவிருந்த சமயத்தில் அப்பெண் தனது சிறுநீரகத்தை வழங்க மருத்ததனால் நோயாளி கடும் சிக்கலில் அகப்பட்டுக்கொண்டுள்ளார். அவர் தினமும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரது உறவினர்களால் அலவத்துகொடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பெண், நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக