மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற, இந்தியருக்கு, பிஜி நாட்டு நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்துள்ளது.நியூசிலாந்து அருகே, பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் உள்ள பிஜி தீவின்
ஜனத்தொகை, 90 ஆயிரம். இதில், 40 சதவீதம் பேர் இந்தியர்கள்.
தலைநகர் சுவா அருகே உள்ள, வட்டுவாகா என்ற நகரில் வசித்தவர், விமலேஷ் தயாள், 33; இவர் மனைவி, ரஞ்சினி ரேகர் மகள்கள் அமிஷா, அனிஷா.
கடந்த, 2011ல், மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று விட்டு, தற்கொலைக்கு முயன்ற, விமலேஷ், கைது செய்யப்பட்டார்.
வீட்டு உரிமையாளர் மகனுடன், ரஞ்ஜினி கள்ள தொடர்பு வைத்திருந்ததால், கொலை செய்ததாக, விமலேஷ், வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, போதிய ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், விமலே{க்கு, உயர்நீதி மன்றம், ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
இவர், பரோலில் வெளியே வர வேண்டும் என்றால், குறைந்த பட்சம், 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக