விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படம் யூன் மாதம் விஜய் பிறந்தநாள் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் - அமலாபால் ஜோடி சேர்ந்துள்ள தலைவா
படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல்களும் முடிவடைந்துள்ளதால் மே மாதம் இசை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தலைவா படத்தின் வெளியீடு எப்போது என்பது தான் இப்போதைக்கு ரசிகர்களின் கேள்வி.
அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப போஸ்ட் புரடெக்சன் வேலைகளை விரைவாக முடித்து யூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
யூன் 21ம் திகதி நடிகர் விஜய் பிறந்தநாள் வருகிறது. விஜய் பிறந்தநாள் பரிசாக அந்த படத்தினை ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.
இதன் மூலம் தனது ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளிக்கவேண்டும் என்பது விஜய் விருப்பமாம்.
இந்நிலையில் அஜித் பிறந்தநாளான இன்று தலைவா படத்தில் விஜய் பாடியுள்ள பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக