பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பின்னர் 07 வயது ஆண் குழந்தை கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விபரீதம் கேகாலையில் இடம்பெற்று உள்ளது.
சிறுவன் புஷ்பகுமாரவின் படுகொலைக்கு பின்னால் பெற்றோரின் அசமந்த போக்கும் உள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
ஏனென்றால் சிறுவன் இரண்டாவது தடவையாக ஒரே நபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றார். முதலாவது தடவை துஷ்பிரயோகம் செய்யப்பட்டபோது பெற்றோருக்கு முறையிட்டு இருந்தார்.
“எனது காற்சட்டையை கழற்றினார்..... என்னை தொந்தரவு செய்ய முயன்றார். ”
சிறுவன் அழுது கொண்டு கூற... அப்பா கோபம் கொண்டு சண்டைக்கு புறப்பட... எதுவும் நடந்திருக்க மாட்டாது.... வீணாக பிரச்சினைக்கு போக வேண்டாம் என்று சொல்லி தடுத்து விட்டார் அம்மா.
கேகாலை வலகம்பா வித்தியாலயத்தில் தரம் - 02 இல் படிக்கின்ற சிறுவன் கடந்த வாரம் கடத்தப்பட்டார். இவரது கழுத்துப் பட்டியல் இவரது கழுத்து நெருக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கின்றார். நில்மல்கொட பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
கொலையாளி முன்னாள் இராணுவ சிப்பாய். இப்பாழடைந்த வீட்டுக்கு அருகில் வசிப்பவர். வித்தியாசமான நடத்தைகள், ஆசைகள் உடையவர். இவருக்கு மனைபி, பிள்ளைகள் இருந்தாலும் பிரிந்து வாழ்கின்றார்.
இவர் இரு வருடங்களுக்கு முன் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இருந்த விடயம் பொலிஸாரின் கவனத்தை ஈர்த்தது. இவர் இப்பிரதேசத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு ரொபிகள், செக்லேட்டுகள், இனிப்பு பண்டங்கள் போன்றவற்றை கொடுப்பார். இவரால் ஏராளமான சிறுவர்கள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
சிறுவனின் அப்பா தபால் கந்தோரில் வேலை பார்ப்பவர். அம்மா ஆடைத் தொழிற்சாலை ஊழியர். ஒரு அண்ணா.
பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்த புறபாடு ஓட்டோவில் சந்திக்கு சென்று திரும்புகின்றமை சிறுவனின் பழக்கம். அன்று அப்பா இல்லாமல் தனியே சென்று இருக்கின்றார். அப்போதுதான் கடத்தப்பட்டு உள்ளார்.
தம்பி .. திரும்பி வரவில்லை என்று அப்பாவுக்கு தொலைபேசியில் அண்ணன் மதியம் 2.00 மணி அளவில் சொல்லி இருக்கின்றார். வீட்டுக்கு வந்த பிற்பாடு அப்பா அயலவர்களுடன் சேர்ந்து சிறுவனை தேடி இருக்கின்றார். மாலை 6.00 மணி வரை தேடி இருக்கின்றனர். எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.
பொலிஸிற்கு முறையிட்டனர். பொலிஸ் நாய்களின் உதவியுடன் சிறுவன் தேடப்பட்டார். பாழடைந்த வீட்டின் ஒரு புறத்தில் புஷ்பகுமாரவின் புத்தகப் பை காணப்பட்டது. சிறுவனின் உடுப்புக்கள் அகற்றப்பட்டு இருந்தன. தொடர்ந்து ஒரு நபரை சந்தேகத்தில் பொலிஸார் பிடித்தனர்.
இவர்தான் கொலையாளி என்பதும் இப்பிரதேசத்தில் குறைந்தது 07 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து உள்ளார் என்பதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
தொடர் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக