புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


எதிர்நீச்சல் படத்தில் காதல் தோல்வி பாடலுக்கு நடனமாடிய நயன்தாராவைத் தேடி பல காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்.

தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடித்துள்ள எதிர் நீச்சல் படம் இன்று வெளியானது.

இந்த படத்தில் காதல் தோல்வி பாடல் ஒன்று உள்ளது. இந்த பாட்டுக்கு தனுஷுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் நயன்தாரா.

நயன்தாரா காதலில் தோல்வி அடைந்தவர் என்பதால் தான் இந்த பாட்டுக்கு தெரிவு செய்துள்ளனர்.

குவியும் காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் எதிர்நீச்சல் பாடலைப் பார்த்த பலர் நம்ம படத்திலும் காதல் தோல்வி பாட்டுக்கு நயன்தாராவை ஆட வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து அவரிடம் கேட்டுள்ளனர்.

நண்பனுக்காக குத்தாட்டம் போட்டால் இப்படி ஆளாளுக்கு நம்மை காதல் தோல்வி பாட்டுக்கு ஆடச் சொல்கிறார்களே என்று நயன்தாரா கடுப்பில் உள்ளாராம்.

ஒரு குத்துப்பாட்டு ஆடியது நம் இமேஜை இப்படி ஆக்கிவிட்டதே என்று நயன் நொந்து போய் உள்ளார் நயன்தாரா.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top