புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


2013 ஆ‌ம் ஆ‌ண்டு மே மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்











1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வாகன வசதிப் பெருகும். வீடு, மனை அமையும். நிர்வாத்திறமைக் கூடும்.

அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.சொத்து சம்பந்தப் பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். அவ்வப்போது எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும்.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் நாட்டம் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்தி புதிதாக கொள்முதல் செய்வீர்கள்.

பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடி வந்து நீங்கும். மேலதிகாரி உதவுவார். கலைத்துறையினர்களே! உங்களின் புகழ், கௌரவம் உயரும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 1, 3, 5, 10, 18
அதிர்ஷ்ட எண்கள் : 1, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ப்ரவுன்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவு ஓயும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.

பழைய சொந்தங்களைச் சந்திப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பழுதான மின்சார, மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள்.மனைவி வழி உறவினர்கள் உதவுவார்கள். சகோதர வகையிலும் நிம்மதி உண்டு. ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். அவ்வப்போது வீண் செலவு, மனயிறுக்கம், தலைச்சுற்றல், முன்கோபம் வந்து செல்லும். தாயார் ஆதரித்துப் பேசுவார்.

அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். கணிசமாக லாபம் உயரும். கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை.

பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 6, 7, 15, 16, 20
அதிர்ஷ்ட எண்கள் : 6, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், க்ரீம் வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி, ஞாயிறு


3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். பெரிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மூத்த சகோதரர் மனம் விட்டு பேசுவார். ஷேர் மூலம் லாபம் வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வழக்கில் வெற்றி உண்டு.பிள்ளைகளின் உயர்கல்வி, திருமண முயற்சிகள் அலைச்சலின் பேரில் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உயரதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினர்களே! வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். சுற்றியிருப்பவரின் சுயரூபத்தை அறியும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 3, 1, 9, 10, 12
அதிர்ஷ்ட எண்கள் : 3, 5
அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், இளம்சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். புது வேலை அமையும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும்.

சகோதரர் பாசமழைப் பொழிவார். பிள்ளைகளிடம் நல்ல மாற்றம் உண்டாகும்.பூர்வீக சொத்தால் அலைச்சல், விரையம் வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.வி.ஐ.பிகளின் அறிமுகம் கிட்டும். வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு.

குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.ஷேர் மூலம் பணம் வரும். அரசால் அனுகூலம் உண்டு. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள்.அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள்.

கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள்.வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். சமய சந்தர்ப்பம் அறிந்து காய் நகர்த்தும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 4, 6, 15, 24, 22
அதிர்ஷ்ட எண்கள் : 2, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், பிஸ்தாபச்சை
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி


5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலைகளை தொடர்வீர்கள்.குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந்தம் தேடி வரும். சொத்து சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

அவ்வப்போது வீண் டென்ஷன், முதுகு, மூட்டு வலி வந்து விலகும். ஆன்மீகவாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு. அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள்.கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8, 15, 23
அதிர்ஷ்ட எண்கள் : 4, 7
அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், மயில் நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்


6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். சகோதரரிக்கு திருமணம் முடியும். வீண் செலவுகள் குறையும். வேலைக் கிடைக்கும். உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஹிந்தி பேசுபவர்கள் உதவுவார்கள்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! தலைமையை பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். போட்டிகள் குறையும். புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! வீண் வதந்திகள் விலகும். எதிர்ப்புகளை எளிதாக சமாளிக்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 6, 13, 14, 15, 17
அதிர்ஷ்ட எண்கள் : 1, 6
அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், ஆரஞ்சு
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் கனத்த மனசு லேசாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும்.புது வேலைக் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.

பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். அவ்வப்போது மனைவியுடன் வாக்குவாதம் வரக்கூடும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

எதிர்பார்த்த வகையில் உதவிகள் உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். கமிஷன் மூலம் பணம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர்களே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். விட்டுக் கொடுப்பதால் வெற்றி பெறும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 7, 11, 15, 20, 24
அதிர்ஷ்ட எண்கள் : 5, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய்

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் உங்களின் இலக்கை போராடி எட்டிப் பிடிப்பீர்கள். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும். அடகு வைத்திருந்த நகையை மீட்பீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள்.

மனைவியுடன் கருத்து மோதல்கள், அவருக்கு தலைச்சுற்றல், கர்பப்பை வலி வந்து விலகும். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் இருந்த பிரச்னைகள் நீங்கும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். தன் பலம், பலவீனத்தை உணரும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8, 15, 17
அதிர்ஷ்ட எண்கள் : 2, 4
அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மயில்நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி


9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.

உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்துப் பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அவ்வப்போது தூக்கமின்மை, திடீர் பயணங்கள் வந்து செல்லும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். அரசியல்வாதிகளே! மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். கன்னிப் பெண்களே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள்.

வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் பரந்த மனசை மூத்த அதிகாரி புரிந்துக் கொண்டு உதவுவார். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சமயோஜித புத்தியாலும் சவால்களை சமாளிக்கும் மாதமிது.

அதிர்ஷ்ட தேதிகள் : 9, 10, 18, 24, 27
அதிர்ஷ்ட எண்கள் : 6, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கிரே
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, புதன்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top