புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-போடி அருகே மலைக் கிராமத்தில், 7 வயது சிறுமியை கற்பழித்த காமக் கொடூரனை பிடித்த கிராமத்தினர், கட்டி வைத்து, தர்ம அடி கொடுத்தனர். தேனி மாவட்டம், போடி அருகே சோலையூரில்,
பழங்குடியினர் வசிக்கின்றனர். கிராமத்தின் அருகில் உள்ள மாந்தோப்பில், போடி புதூரை சேர்ந்த விவசாயி, மனைவி, மகளுடன் வேலை செய்து வருகிறார். இவரது, 7 வயது மகள், இப்பகுதியில் ஆடு மேய்க்க செல்வது வழக்கம்.

கடந்த, 29ம் தேதி மாலை, ஆடு மேய்க்க சென்ற சிறுமி, வீடு திரும்பவில்லை. இரவு, 9:00 மணிக்கு, முனியாண்டி, 25, என்பவரின் வீட்டருகே, சிறுமியின் முனகல் சத்தம் கேட்டது. அவ்வழி சென்ற வடமலு என்ற பெண், சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

மாடு மேய்க்கச் சென்ற தன்னை, முனியாண்டி, தூக்கிச் சென்று, வீட்டருகே கற்பழித்தார் என்றும், மயங்கியதும், அங்கேயே போட்டு சென்றார் என, சிறுமி கூறினாள். இந்த விவரங்களைக் கூறாமல், சிறுமியின் பெற்றோரிடம், வடமலு விட்டுச் சென்றார்.

இரவில், சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. விசாரித்த போது, பலாத்கார சம்பவத்தை, பெற்றோரிடம் கூறினாள். நேற்று காலை, தன் மகளுக்கு நேர்ந்த சம்பவத்தை, கிராமத்தினரிடம் கூறினர். ஆத்திரமடைந்த கிராமத்தினர், முனியாண்டியை கட்டி வைத்து, தர்மஅடி கொடுத்தனர். பின், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

முனியாண்டியை, போலீசார் கைது செய்த நிலையில், சிறுமிக்கும், முனியாண்டிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெறும் சிறுமிக்கு, பால், பிஸ்கட் வாங்கித் தருமாறு, டாக்டர்கள் கூறினர். பால் வாங்கக் கூட, பெற்றோரிடம் பணம் இல்லாததால், நர்ஸ் மற்றும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள், பணம் கொடுத்து உதவினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top