உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதாக கருதி 7வயது சிறுமியை 'அர்ச்சகர்' தந்தையும், சித்தியும் சேர்ந்து படுகொலை செய்திருக்கின்றனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் நம்பூதிரி. அங்குள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களது 7வயது மகள் ஆதினி அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். ஸ்ரீஜா கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்தார்.
அதன் பின்னர் சுப்பிரமணியன் தம்மை விட 3 வயது மூத்த தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவி இருந்தபோது ஆதினி மீது சுப்பிரமணியன் மிகவும் அன்பாக இருந்தார். ஆனால் தேவிகாவை கைப்பிடித்ததும் மாறத் தொடங்கினார்.
2-வது மனைவியுடன் சேர்ந்து கொண்டு ஆதினியை அடித்து உதைத்துள்ளார். சித்தி கொடுமை என்பார்களே அதற்கு இலக்கணமாக ஆதினியை தேவிகா கொடுமைப்படுத்தினாள். தங்களின் உல்லாச வாழ்க்கைக்கு ஆதினி இடையூறாக இருப்பதாக நினைத்தனர். உட்சகட்டமாக ஆதினியின் உடலில் சூடுவைத்து கொடுமைப்படுத்தினார்கள்.
இதனால் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே நடக்காவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆதினியை அழைத்துச் சென்றனர். சிறுமியின் உடலில் உள்ள காயங்களை பார்த்த டாக்டர் அதிர்ந்து போனார். சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளதை அறிந்த அவர் நைசாக நடக்காவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது ஆதினி தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினாள்.
சிகிச்சை பலனளிக்காமல் சிறுமியின் உயிர் பிரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுப்பிரமணியம் மற்றும் தேவிகாவை கைது செய்தனர். சிறுமியை சித்ரவதை செய்து கொன்றதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக