புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஐ.பி.எல்.எலிமினேட்டர் போட்டி-ஐதராபாத் அணியை வீழ்த்தியது ரா‌ஜஸ்தான்ஐ.பி.எல். சீசன் 6-ன் இறுதிப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.


தொடக்க வீரர்களாக டிவைன் சுமித்- டரே களம் இறங்கினார்கள். தொடக்க ஓவரே மும்பை அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் கிளீன்போல்டாகி வெளியேறினார். அடுத்து 2-வது விக்கெட்டுக்கு டரேவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 2-வது ஓவரை மோர்கல் வீசினார். முதல் பந்தில் டரே கிளீன்போல்டாகி வெளியேறினார் அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த திருப்தியில் மோர்னே பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இந்த சீசனில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத ராயுடுவுக்கு அடுத்தடுத்து விக்கெட்டு வீழ்ந்ததால் விரைவில் களம் இறங்கினார். அவர் களம் இறங்கும்போது மும்பை அணி 3.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு இருவரும் நிதானமாக விளையாடினார்கள். தினேஷ் கார்த்திக் 21 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு ராயுடுவுடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். ராயுடு 36 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனாலும் பொல்லார்டு சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் கடைசி ஓவரின் 5-வது மற்றும் 6-லது பந்தில் இரண்டு இமாலய சிக்சர் விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி சார்பில் பிராவோ சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. ஹசி- விஜய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை மலிங்கா வீசினார். முதல் ஓவரே சென்னை அணிக்கு பேரிடியாக அமைந்தது. ஹசி 4-வது பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த வந்த ரெய்னா முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்த ஓவரை ஜான்சன் வீசினார். அந்த ஓவரில் 4-வது பந்தில் பத்ரிநாத் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதனால் சென்னை அணி 1.4 ஓவரில் 3 ரன்னுக்குள் 3 முக்கிய விக்கெட்டை இழந்தது.

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக சென்னை அணியின் தோல்வி உறுதியானது. கேப்டன் டோனி மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் 63 ரன்கள் எடுத்தார். சென்னையில் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணி 23 ரன்களில் அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
 
Top