சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று முற்பகல்
நடைபெற்றது. வசந்த மண்டப பூசைகளை அடுத்து தேர்வீதி உலா வந்தது. பக்தர்கள் காவடி கற்பூரச்சட்டி எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
பிரசித்தி பெற்ற இந்த ஆலய உற்சவத்தில் சுவிட்சர்லாந்தின் பலபாகங்களிலிருந்தும் பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவிஸ் மக்களும் இந்த உற்சவத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.