புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியா-கேரள மாநில மந்திரியாக இருப்பவர் திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணன். இவர் நேற்று பகல் தனது காரில் பத்தனம் திட்டை அருகே மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவரது உதவியாளரும் பயணம் செய்தார்.


அப்போது நடுரோட்டில் ஒரு பெண் அழுது கொண்டே ஓடினார். அந்த பெண்ணை ஒரு முதியவர் துரத்திக் கொண்டு சென்றார். இதை பார்த்த மந்திரி அதிர்ச்சி அடைந்து டிரைவரிடம் காரை நிறுத்தும்படி கூறினார். அதன்பிறகு தனது உதவியாளரையும் டிரைவரையும் அனுப்பி அந்த பெண்ணை முதியவர் ஏன் துரத்தி செல்கிறார்? என்பது பற்றி விசாரிக்கும்படி கூறினார்.

அவர்கள் அந்த பெண்ணையும், முதியவரையும் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். உடனே அந்த பெண் மந்திரி ராதாகிருஷ்ணனிடம் ஓடி வந்து அழுதார். சங்கனாச்சேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தன்னை அந்த முதியவர் நைசாக பேசி ஏமாற்றி அழைத்து சென்றதாகவும் திடீர் என்று கற்பழிக்க முயன்றதால் அவரிடம் இருந்து தப்பி ஓடியதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து சங்கனாச்சேரி போலீசாரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி மந்திரி தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு சென்று அந்த முதியவரை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த முதியவர் பெயர் சசி (வயது 54) என்பதும், அந்த பகுதியில் உள்ள சென்னலூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் பலாத்கார வழக்குகளும் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ள விவரங்களும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


 
Top