அமெரிக்காவில் மூளை ஆபரேசனின் போது வாலிபர் "கிதார்" வாசித்த நிகழ்ச்சி ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் பிராட் கார்டன் (39). கிதார் இசைக்கலைஞர். கடந்த 2006-ம் ஆண்டில் இவரது கையில் நடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அவருக்கு பக்கவாத நோயும் உருவானது. எனவே, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் பக்கவாத நோயை சரிசெய்ய மூளையில் "பேஸ் மேக்கர்" கருவி பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக பிராட் கார்டரின் மூளையில் டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். அப்போது கார்டர் தனக்கு மிகவும் பிரியமான கிதாரில் இசை வாசித்துக் கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சி வீடியோ மூலம் படமாக்கப்பட்டது.
இதற்கிடையே ஆபரேஷன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆபரேஷனின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி 'டுவிட்டர்' ஆன்லைனில் 500 தடவைக்கும் மேல் ஒளிபரப்பப்பட்டது.
இச்சம்பவம் மருத்துவ உலகில் நடந்த சாதனைகளில் ஒன்று என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.