புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உத்தரபிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டம் நகேரி கிராமம் பகுதியில் உடலில் ஆணி அடிக்கப்பட்ட காயங்களுடன் மர்மமான முறையில் இறந்த 4 வயது சிறுவனின் உடல் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.

பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வந்தனர். உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில் நரேந்தர் (55), அவரது மகள் ஜோஷி (25) ஆகியோரிடம் பொலிசார் விசாரணை நடத்தியது.

அப்போது விஷால் (4) என்ற சிறுவனை அவர்கள் இருவரும் நரபலி கொடுத்த திடுக்கிடும் உண்மை வெளியானது.

தலைப்பிள்ளையை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என உள்ளூர் ஜோதிடர் கூறியதால் அதே கிராமத்தை சேர்ந்த விஷாலை கடத்தி வந்து நரபலி கொடுத்ததாக பொலிசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளன
 
Top