புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நியூயார்க்கில் உள்ள சீன வெளியுறவு துறை அமைச்சகத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றுபவர் பங்ஃபு வாங்.
இவரது சகோதரி குவோ வாங்(37) பங்ஃபு வாங்-கை சந்திக்க சுற்றுலா விசாவில் நியூயார்க் வந்துள்ளார். அங்குள்ள ஹெரால்ட் ஸ்கொயர் பகுதியில் இருக்கும் பிரபல வணிக நிறுவனத்திற்கு சென்ற குவோ வாங், பல மணிநேரம் கடையை சுற்றிப் பார்த்துவிட்டு சில உடைகளை தெரிவு செய்தார்.

பொருட்களுக்கு ‘பில்’ போடும் இடத்தை கடந்து வேகமாக சென்ற அவர் பல மாடிகளை கடந்து சாலைக்கு செல்ல முயன்றார். இதனை சி.சி.டி.வி.யில் பார்த்துவிட்ட ஊழியர், காவல் காரருக்கு "வாக்கி டாக்கி" மூலம் தகவல் அளித்தார்.

வாசல் கதவருகே வந்த குவோ வாங்கை காவலர் பிடித்துக் கொண்டார். அவரது கைப்பையை சோதனையிட்ட போது 148 டொலர்கள் மதிப்புள்ள உடைகள் உள்ளே இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவரை கடையின் மேலாளர் பொலிசில் ஒப்படைத்தார். பொலிசில் பிடியில் இருந்து அவரை விடுவிக்க உறவினர்கள் செய்த முயற்சி ஏதும் பலனளிக்கவில்லை.

மன்ஹட்டன் கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஒருநாள் முழுவதும் பொதுச் சேவை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதி அவரை விடுதலை செய்தார்.
 
Top