புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவின் பொஸ்டன் நகர் அருகில் உள்ள மெத்துவன் என்ற பகுதியை சேர்ந்த கேமரான் டி அம்புரோசியா என்ற 18 வயது நிரம்பிய வாலிபன் தனது முகப்புத்தகத்தில் பொஸ்டன் மரதன்
குண்டுவெடிப்டை விட மிக மோசமான தாக்குதலை விரைவில் நடத்துவேன் என்று மிரட்டல் விடுத்து கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தான்.
இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து கடந்த 1ம் திகதி கேமரானை கைது செய்தனர்.

இந்நிலையில், முகப்புத்தக்கதில் கேமரான் வெளியிட்ட கவிதை காணொளியில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனவே, அவனுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவனது குடும்பத்தார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த மாசாசூசெட்ஸ் நீதிமன்றம், கேமரானுக்கு பிணை வழங்க மறுத்துவிட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்டதரனிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Top