இந்தியா -பீகார் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது தோழியை ஒரு பொறியியல் மாணவர் திருமணம் செய்துக்கொண்டார். இத்தம்பதியினரை மக்கள் வாழ்த்தி ஆசி வழங்கினர்.
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார். அவருடன் சென்ற நண்பரையும் அந்த கும்பல் அடித்து உதைத்து படுகாயப்படுத்தியது.
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த பெண்ணை அவரது நண்பர் நேற்று திருமணம் செய்து கொண்டார். இருதரப்பு உறவினர் மற்றும் போலீசாரின் வாழ்த்துகளோடு உள்ளூர் கோயிலில் இந்த திருமணம் நடைபெற்றது.
பொறியியல் மாணவனான மணமகனின் இம்முடிவை பலரும் வரவேற்றுள்ளனர்.