இலங்கையர்களுக்கான போலி இந்திய கடவுச் சீட்டுக்களை தயாரிக்கும் சட்டவிரோத நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய தமிழ்நாட்டில் போலி ஆவணங்களை சமர்பித்து தயாரிக்கப்பட்டிருந்த 127 கடவுச் சீட்டுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான போலி கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி செல்வதற்கு தயாரான நாடுகளிலுள்ள சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் இந்திய தூதரகங்களுக்கு இந்த சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவ குறித்து இந்திய பாதுகாப்பு பிரிவினரால் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.