பாரிஸ் மெட்ரொ ரயில் கூரையின் மீது சாகசப்பயணம் நடத்திய இளைஞர் ஒருவர் தன் நண்பரை கைகொடுத்து மேலே தூக்கிய பொழுது குகையின் விளிம்பில் முட்டி மரணம் அடைந்தார்.
இரவு பத்து மணியளவில் நடந்த இந்த விபத்தில் ரயிலின் கூரையின் மீது நின்றவர் ரயில்
பெட்டிகளுக்கு இடையே தூக்கி எறியப்பட்டு மண்டை உடைந்து பிணமானார்.
இவர் கைகொடுத்து தூக்கிய நண்பரோ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தங்களின் சாகசப்பயணம் You tubeல் வெளி வர வேண்டும் என்று விரும்பி இவர்கள் இருவரும் தங்களுக்குள் கமெராவை பொருத்தி இருந்தனர்.
இது போன்ற கரணம் தப்பினால் மரணம் என்ற சாகச விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்கள் பெரும்பாலும் சம்பவ இடத்திலேயே பலியாவதாக ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பொலிசார் ஒருவர் தெரிவித்துள்ளார்.