டிவி அருகே வைத்திருந்த கோழி முட்டையிலிருந்து, குஞ்சு வெளியே வந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தை அடுத்த ஒரு கோடி கிராமம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் குமார்(வயது 32), கூலித்
தொழிலாளி. இவரது வீட்டில், 20 நாட்டு கோழிகளை கூண்டு அமைத்து வளர்க்கிறார்.
20 தினங்களுக்கு முன் கூண்டில் இருந்த ஒரு கோழி முட்டையிட்டது. இந்த முட்டையை அவர் மனைவி மயிலம்மாள், வீட்டின் உள்ளே இருக்கும் டிவிக்கு பின்னால் வைத்து விட்டார்.
நேற்று காலை 5.15 மணிக்கு வேலைக்கு செல்ல குமார் புறப்பட்ட போது, டிவிக்கு பின்னால், கோழி குஞ்சு சத்தம் கேட்டது.
அப்போது அங்கு சென்று பார்த்த போது தான், டிவி வெப்பத்தில் முட்டையிலிருந்து குஞ்சு பொரித்திருந்தது தெரியவந்தது.