புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
சமீப காலமாக பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. கடந்த நில நாட்களுக்கு முன்பு பஸ்சில் சென்ற 30 வயது பெண் துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்டார். அதில், அப்பெண் பயணிகள் முன்னிலையிலேயே
கொடூரமாக கற்பழிக்கப்பட்டது கொடூர சம்பவமாக கருதப்படுகிறது.

இது போன்று, ஒரு பணி புரியும் பெண் கடத்தப்பட்டு ஒடும் வேனில் பல ஆண்களால் கற்பழிக்கப்பட்டார். இச்சம்பவம் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்தது.

ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் விளைவாக இதே கும்பல் பிரேசில் சற்றுலா வந்த அமெரிக்க மாணவியை ஓடும் வேனில் கற்பழித்தனர்.

அதை தடுக்க முயன்ற மாணவியின் காதலரை இரும்பு கம்பியால் அடித்து உதைத்து காயம் ஏற்படுத்தினர்.

மேலும் இது போன்று நடக்கும் கற்பழிப்பு காட்சிகள் வீடியோக்களாகவும் ரியோடி ஜெனிரோவில் வலம் வருகின்றன.

இது பிரேசில் நாட்டில் வாழும் பெண்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. ரோட்டில் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். பிரேசிலில் ஒரு பெண் அதிபராக உள்ளார்.

சக்தி வாய்ந்த போலீஸ் கமாண்டராக ஒரு பெண் பதவி வகிக்கிறார். இருந்தும் அங்கு இது போன்ற கற்பழிப்புகள் நடப்பது பெண்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
Top