புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னல் கிராமத்தில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதுடன் இச்சிறுமியைக் கடத்திக் கொண்டு சென்ற குடும்பஸ்தர்
ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி சம்மாந்துறை தென்னல் கிராமத்தின் ஊடாக சென்ற 3 பிள்ளைகளின் தந்தையான ஒருவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடத்திக் கொண்டு சென்றிருந்தார்.

கடந்த 20 ஆம் திகதி முதல் இச்சிறுமி காணாமல் போனது தொடர்பில் சிறுமியின் தாய் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து அம்பாறை பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
Top