புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நீண்ட இடைவெளிக்குப் பின் வடிவேலு நடிக்கும் படம் ‘தெனாலிராமன்’ இதன் ஆரம்பமே அதிரடியாக இருக்க வேண்டும்
என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் வடிவேலு.

அவரின் பார்வைக்குப் போகாமல் எந்த காரியத்தையும் செய்யக் கூடாது என்று நேரடியாகவே இயக்குனர் யுவராஜை அழைத்து சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே ’போட்டா போட்டி’ படத்தை இயக்கிய அனுபவம் யுவராஜிக்கு இருந்தாலும், போதிய அனுபவம் இருக்காது என நினைக்கும் வடிவேலு தான் சொல்லும் டெக்னிஷியன்களைத்தான் வைத்துக் கொள்ளவேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார்.

அதனால் இன்றைக்கு பெரிய அளவுக்கு சம்பளம் வாங்கும் டெக்னிஷியன்களை அழைத்துப் பேசி ஒப்பந்தம் போட்டிருக்கிறார் தயாரிப்பு நிர்வாகி. அத்துடன் கிட்டத்தட்ட முழு படமும் அரண்மனை செட்டப்பில் எடுக்க இருப்பதால், ஏ.வி.எம் மில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு செட்டும் போடப்பட்டுள்ளது.

 
Top