டி.வி.பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை குத்திக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டான்.
பலியான தந்தையின் பெயர் நாகலு (வயது 55) ஆந்திர மாநிலம் நிலுமாபாத் மாவட்டம் கும்மரி
வாடாவைச் சேர்ந்தவர். டெய்லராக பணியாற்றி வந்தார்.
நேற்று இவர் குடும்பத்துடன் டி.வி.சேனலில் சினிமா பார்த்துக் கொண்டு இருந்தார். படம் முடிந்ததும் நாகலு சி.டி.பிளேயரில் ஆர்யா நடித்த படம் பார்க்க விரும்பினார். ஆனால் அவரது 16 வயது மகன் நிம்மி (பெயர் மாற்றம்) வேறு சேனலுக்கு மாற்றினார். இதில் தந்தை-மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் நிம்மி வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து தந்தையின் வயிற்றில் குத்தினார். ரத்தம் பீறிய நாகலு வீட்டிலேயே பிணமானார். போலீசுக்கு தெரிவிக்காமல் பிணத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றினர்.
தந்தையை கொன்ற மகன் நிம்மியையும் கைது செய்தனர். பலியான நாகலுவுக்கு சுகுணா என்ற மனைவியும், நிம்மி தவிர மேலும் 3 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.