புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குளிக்கச் சென்ற மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று கந்தளாய், வான் எலபொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.


இச்சம்வம் நேற்று (25) வான் எலப் பொலிஸ் பிரிவு பன்ல கொடல் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் ஜெயந்திபுர மகா வித்தியாலயத்தில் தரம்-8 இல் கல்வி பயிலும் எச்.என்.முதவந்தி எனும் 13 வயது மாணவியே உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தில் இம் மாணவி அப் பகுதியில் உள்ள பொதுக் கிணறு ஒன்றில் குளிப்பதற்காக சென்று கொண்டிருந்த போது, சட்ட விரோதமாக பெறப்பட்ட மின்சாரம் கம்பி வேலியுடாக சென்று கொண்டிருந்து.

அதில் மின் கசிவு இருந்ததால் அதில் சிக்கி இம் மாணவி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம் மாணவியில் பிரேத பரிசோதனை கந்தளாய் வைத்தியசாலையில் இடம் பெற்று சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை வான் எலப் பொலிஸாரினால் மேற்கொண்டு வருகின்றனர்.

 
Top