காதலிக்க மறுத்த பெண்ணை டீசல் ஊற்றி தீவைத்து எரித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அணிக்கால் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சுபா ஸ்ரீயை, எவரெஸ்ட் என்ற 24 இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
சுபா ஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த எவரெஸ்ட், அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. செய்வதறியாது தவித்த அவர், கூச்சல் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் படகு பயன்பாட்டிற்காக வைத்திருந்த டீசலை பெண்ணின் மீது ஊற்றி எரித்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
பாதிக்கப்பட்ட சுபா ஸ்ரீ ஆபத்தான நிலையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, தப்பியோடிய சுபாஸ்ரீயை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.