புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் குழந்தைகளை விற்கும் சந்தை ஒன்று இயங்கி வருகிறது. அதன் பின்னணியை ஆராய்ந்து படமாக எடுத்து வருகிறார் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய
ரவி.

’அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் இப் படம், பல்வேறு பிரச்சணைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தெரிந்தே ’ என்னதான் பேசுவதோ’ என பெயரிட்டு இப் படத்தை இயக்கி வருகிறேன்’’. எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

பாடல்களை நா.முத்துகுமார் எழுதுகிறார். மேலும், விஜய்ராம், ரோசன், சின்னசாமிதாஸ், தஷா ஆகியோர் நடிக்கின்றனர். கவுதம் விஷன்ஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. உண்மை சம்பவம்தான் கதை என்றாலும், அனைவருக்கும் பிடித்த மாதிரி திரைக்கதை அமைத்திருக்கிறேன்’ என்கிறார் ரவி
 
Top