நுவரெலியா, பொகவந்தலாவை, மொடக்கு சீனாகுள தோட்டத்தில் 10 வயதுச் சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை மேலதிக சிகிச்சைகளுக்காக சிறுவன் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.