ரஷ்யா நாட்டின், மாஸ்கோ பகுதியில் இயங்கி வந்த மனநல மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
நோயாளிகள் இருந்த பகுதியில்தான் தீ பரவியுள்ளது. அந்த சமயத்தில் நோயாளிகள் அனைவரும் தங்கள் படுக்கைகளில் இருந்துள்ளனர். ஜன்னல்களிலும் தடுப்புக் கம்பிகள் இருந்துள்ளதால், யாரும் தப்பி ஓடியதாகத் தெரியவில்லை.
தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தபின், இதுவரை தீயில் கருகிய 12 உடல்களை மீட்டுள்ளனர். இங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெரும்பான்மையானோர் உள்ளூர்வாசிகள் ஆவர். தற்சமயம் மொத்தம் 41 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்ததாகக் கூறப்படுகின்றது. எனவே குறைந்தது 36 நோயாளிகளாவது இந்த விபத்தில் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
இரண்டு மணி அளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்திற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆயினும் விபத்திற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. (டி.என்.எஸ்)
0 கருத்து:
கருத்துரையிடுக