மம்தா மோகன்தாசுக்கு மீண்டும் புற்றுநோய் தாக்கியதால் சிகிச்சை எடுத்து வருகிறார்.
‘சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’, ‘தடையற தாக்க’ ஆகிய படங்களில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். 2010-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
அதற்கு சிகிச்சை மேற்கொண்டு நோயில் இருந்து மீண்டார். சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்தநிலையில், மீண்டும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் அவரது இரசிகர்கள் நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர். கடந்த சில நாட்களாக டுவிட்டரில் கவனம் செலுத்தாமல் இருந்த மம்தா மீண்டும் அதில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதில் மம்தா, ‘மீண்டும் புற்றுநோய் வந்திருக்கிறது. சிகிச்சை எடுத்து வருகிறேன். இதிலும் குணம் அடைவேன்’ என குறிப்பிட்டிருக்கிறார். தனது உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்ததற்கும், அதில் இருந்து குணமாக விருப்பம் தெரிவித்திருப்பதற்கும் இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
‘நோய் பற்றி என்றைக்கும் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. துணிச்சலாக அதை எதிர்கொண்டு சிகிச்சை மேற்கொண்டேன். கடினமான தருணம் முடிந்துவிட்டது. இப்போதும் அதை எதிர்த்து போராடுகிறேன். நிச்சயம் மீண்டு வருவேன்’ என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக