புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 ஐபிஎல் 6வது தொடர்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற 35வது லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சொந்த
மண்ணில் வென்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் லெவன் - 149/6
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் கில்கிறிஸ்ட் மற்றும் மந்தீப்சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் லஷ்மிபதி பாலாஜி பந்து வீசினார். ரன்களை நிதானமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சேர்க்கத் தொடங்கியது. சேனநாயக்க வீசிய 2வது ஓவரில் எந்த ஒரு ரன்னும் எடுக்க முடியவில்லை. அது மெய்டன் ஓவரானது...பஞ்சாப் அணியின் ஸ்கோர் 45 ரன்களாக இருந்த போது 7வது ஓவரின் முதல் பந்தில் மந்தீப்சிங் அவுட் ஆனார். அவர் 20 பந்துகளில் 25 ரன்களை எடுத்திருந்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் கில்கிறிஸுடன் வோரா இணைந்து கொண்டார். ஆனால் கில்கிறிஸ்டும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 10வது ஓவரின் 3வது பந்தில் அவுட் ஆனார். அவர் 27 பந்துகளில் 27 ரன்களை எடுத்திருந்தார். அப்போது பஞ்சாப் அணி 67 ரன்களை எடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து வோராவுடன் மில்லர் இணைந்து கொண்டார். வோரா அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தார். அவர் 21 பந்துகளில் 31 ரன்களை எடுத்திருந்தார். இதில் 1 சிக்சர் 3 பவுண்டரிகள் அடங்கும். அவர் 13 வது ஓவரின் 5வது பந்தில் அவுட் ஆனார். 3 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களுடன் பஞ்சாப் அணி நின்றது. களத்தில் இருந்த மில்லருடன் டேவி ஹசி இணைந்தார். ஆனால் மில்லர் 15வது ஓவரில் அந்த அணி 109 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். அவர் 8 பந்துகளில் 10 ரன்களைத்தான் எடுத்திருந்தார். டேவிட் ஹசி 21 ரன்களிலும் மஹம்மூத் 2 ரன்களிலும் அவுட் ஆயினர். 20 வது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் குர்கிரத் சிங் 28 ரன்களுடனும் பியூஸ் சாவ்லா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கொல்கத்தா அனியின் காலில்ஸ் 4 ஓவர்கள் வீசி 14 ரன்களே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கொல்கத்தாவின் சேஸிங் படலம்- தடுமாற்ற தொடக்கம்
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிஸ்லாவும் கேப்டன் காம்பீரும் களம் இறங்கினர். அந்த 10 ரன்களைத்தான் எடுத்திருந்தது. 2வது ஓவரின் 2 வது பந்தில் 8 ரன்கள் எடுத்திருந்த காம்பீர் அவுட் ஆனார். அடுத்து ஆட வந்த யூசுப் பதான் தாம் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இதனால் கொலக்த்தா அணி தொடக்கத்தில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது. அதாவது 2 விக்கெட் இழப்புக்கு 10 ரன்களையே எடுத்திருந்தது.
அசைக்க முடியாத பிஸ்லா- கை கொடுத்த காலிஸ்
தொடக்க வீரராக இறங்கிய பிஸ்லா நிலைத்து ஆடி ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார். அவருடன் இணைந்த காலிஸ் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். அணியின் ஸ்கோரை 70 ஆக இருவரும் உயர்த்திய நிலையில் காலிஸ் அவுட் ஆனார். அவர் 33 பந்துகளில்37 ரன்களை எடுத்திருந்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். பின்னர் பிஸ்லாவுடன் மோர்கன் இணைந்து கொண்டார். ஆட்டம் களைகட்டியது. இருவரும் ரன்களை அற்புதமாகக் குவித்தனர்.
18வது ஓவரில் அபாரம்
வழக்கம் போல கடைசி 3 ஓவர்களில் லேசான டென்சன் தொடங்கியது. ஆனால் இந்த டென்ஷனை 18வது ஓவரில் 2 சிக்சர் அடித்து மோர்கன் தணித்தார். 3வது சிக்சருக்கு அடிக்க முயற்சித்தார். ஆனால் அது கேட்ச் ஆனது. மோர்கன் 26பந்துகளில் 42 ரன்களைக் குவித்தார். அவர் அவுட் ஆனபோது 4 விக்கெட் இழப்புக்கு148 ரன்கள் என்ற நிலையில் அதாவது 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது கொல்கத்தா அணி. பின் சேனநாயக்க களத்துக்கு வந்தார்.
6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
19வது ஓவரில் 2வது பந்தை எதிர்கொண்ட பிஸ்லா 1 ரன் அடித்தார். இதன் மூலம் இரு அணி ஸ்கோரும் சம நிலையில் இருந்தது. 3வது பந்தை ஹர்மீத் சிங் சேனநாயக்கவுக்கு வீசினார். அது கேட்ச் பிடிக்கப்பட்ட நிலையில் அம்பயர் நோ பால் என அறிவிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரரான பிஸ்லா 51 ரன்களுடனும் சேனநாயக்க ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top